நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்
என்று சொல்லி கொள்ள வெட்கப்படுகிறேன்
இந்த பதிவு மூலம் எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. யாரையும் குறிப்பிட்டு இப்பதிவை பகிரவும் இல்லை. இந்த பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னித்தருள வேண்டுகிறேன்.
ஆம். நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன். தவறாமல் ஆலயம் செல்லும் வழக்கம் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக எனக்கு உண்டு. திருப்பலிகளில் பக்தியுடன் பங்கு கொள்கின்றேன் . திருஅவை முன்னிலை படுத்தும் நற்கருணை ஆராதனை , ஜெபமாலை , உள்ளிருப்பு தியானம் போன்ற அனைத்து சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் எனக்கு உண்டு. திருஅவை ஒழுங்குகள் அனைத்தையும் எனது சிறிய வயது முதல் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன் . இவ்வாறாக சமுதாயத்தின் பார்வையில் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் .
ஆனால் என்னவோ தெரியவில்லை ...இத்தனை ஆண்டுகள் முயற்சி செய்தும் என்னை ஒரு கிறிஸ்தவனாக சமுதாயத்திற்கு காட்டிக்கொள்ள முடிந்ததேயொழிய , இயேசு கிறிஸ்துவை துளியேனும் பின்பற்ற என்னால் முடியவேயில்லை . உதாரணத்திற்கு , கடவுள் தம் சாயலாக படைத்த மனிதரில் ஜாதி வேறுபாடுகளை சிக்கென பற்றிக்கொள்ளும் பழக்கம் எனக்கு அதிகமாகவே உள்ளது. பிற ஜாதியை , குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதியை சார்ந்த எவருடனும் என்னால் சொந்தம் கொண்டாட முடியவில்லை . ஏனெனில் ஜாதி வேறுபாடு பார்ப்பதில் நான் ஒரு இந்துவாகவே வாழ்கிறேன் . ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று என்னை நானே சொல்லிக்கொள்வேன் .
திருப்பலி மறையுரைகளை மனதில் நன்கு பதிய வைக்க முயற்சி செய்வேன் . ஆனால் திருப்பலி முடிந்தவுடன், இந்த கருத்தை எடுத்து வைக்க இந்த அருட்பணியாளருக்கு என்ன தகுதியுள்ளது என ஆராய்ச்சி செய்து , கருத்துக்களை காற்றில் பறக்க விடுவேன் . ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் .
நீ உன்னை அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய்வாயாக என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியதை நான் நன்றாக அறிந்திருக்கின்றேன் . நானோ என்னை அன்பு செய்வது போல் எவரையுமே அன்பு செய்ய மாட்டேன். ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்.
உலக மக்கள் அனைவரின் பாவங்களுக்காக தன்னைத்தானே வருத்திக்கொண்டு, அவமானச்சாவை ஏற்றுக்கொண்டவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பது எனக்கு நன்றாகத்தெரியும் . நானோ என்னுடைய பாவத்தையும், குற்றத்தையும் மறைப்பதற்கு அடுத்தவர் மேல் பழி சுமத்தி என்னை யோக்கியனாக காட்டிக்கொள்ளத்தான் முற்படுகிறேன். ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பதும் எனக்கு நல்ல பரிச்சயம் . ஆனால் எதிரிலிருப்பவன் அறைவதற்கு கையை எடுக்கும் முன்னால் , அவனை முந்திக்கொண்டு அவன் கன்னத்தை பதம் பார்க்கும் அளவிற்கு சமுதாய விழிப்புணர்வு என்னிடம் அதிகமாக உள்ளது. ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்.
என்னுடைய படிப்பு , வேலை ,வருமானம் , சேமிப்பு , சொந்தவீடு , வாகனம் , சொத்து என என்னைப்பற்றி , என் குடும்பத்தைப்பற்றி மற்றும் என் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவே ஆயுள் போதவில்லை . இந்த சூழ்நிலையில் நான் எப்போது இயேசு கிறிஸ்து கூறிய மன்னிப்பு , பிறரன்பு குறித்து சிந்திப்பது ? ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் .
திருமணங்களில் ஜாதி மற்றும் வரதட்சணை , சுப காரியங்களில் நல்ல நாள் பார்த்தல் , சகுனம் பார்த்தல் என இன்னும் நிறைய இந்துத்துவ மதிப்பீடுகளை என் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்டு ஊருக்கு உரக்கச் சொல்லுகிறேன் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று.
யாரையும் தீர்ப்பிடாமல் இருப்பது , அனைவரையும் மன்னிப்பது , எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் அன்பு செய்வது , என்னுடைய நண்பனுக்காக உயிரையும் இழக்கத் துணிவது போன்ற எந்தவொரு முட்டாள்தனமான பண்பும் என்னிடம் இல்லை. சமூகத்தின் பார்வையில் நான் "பிழைக்கத்தெரிந்தவன்"(இயேசு கிறிஸ்துவைப்போல் அல்ல). ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்.
எப்பொழுதெல்லாம் பசி என்று வீட்டு வாசலில் வந்து ஒருவன் நிற்கின்றானோ அப்போதெல்லாம் நான்தான் உன்னைத்தேடி வந்துள்ளேன் என இயேசு கிறிஸ்து சொன்னது எனக்கு நன்றாகத்தெரியும். ஆனாலும் மனமுவந்து அந்த எளியவனுக்கு எதையும் தர மனம் இடங்கொடுப்பதில்லை .(அனால் ஆலயத்தில் காணிக்கை போடுவதில் மிகுந்த ஆர்வம்).
பொது நிலையினரில் ஒருவனாக, ஆலயத்திற்கு வரி மற்றும் சந்தா சரிவர செலுத்த வழியில்லாத வறிய சக மனிதனை விரட்டி பிடித்து வசூல் செய்வது , ஆலய திருவிழா காலங்களில் பிரம்மாண்டமான அலங்காரங்கள் செய்வது , வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட பிரிவினைச்சேர்ந்த எவரும் ஆலய நிர்வாகப்பொறுப்புகளில் தலையிடாமல் கவனமாக பார்த்துக்கொள்வது , ஆலயத்திற்கு காணிக்கையாக , நன்கொடையாக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பது , ஒருவேளை தேவ அழைத்தல் கிடைக்கப்பெற்று அருட்பணியாளராக பொறுப்பேற்றால் கூட என்னுடைய இனத்தைச்சார்ந்த தந்தையருடன் இணக்கமாய் இருப்பது என அனைத்து உலகப்பிரமாண காரியங்களிலும் நான் கெட்டி . ஆனாலும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் .
இவ்வாறாக விவிலியம் படித்து , ஜெபமாலை ஜெபித்து , திருப்பலிகளில் பங்கெடுத்து , ஆலயத்திற்கு வரி, சந்தா மற்றும் நன்கொடை தவறாமல் கொடுத்து , அனைத்து திருவருட்சாதனங்களையும் பெற்று....இன்னும் பிற அனைத்தையும் செய்து என்னை கிறிஸ்தவனாக காட்டிக்கொள்கிறேன் .
ஆனால் ஜாதி வேறுபாடு , சுயநலம் , ஆடம்பர வாழ்க்கை ,பிறர் சிநேகமின்மை, மூட நம்பிக்கைகள் என்ற சமுதாய நிர்ப்பந்தங்களால் இயேசு கிறிஸ்துவை மட்டும் 1% கூட என் வாழ்க்கையில் பின்பற்ற முடியவில்லை.
கிறிஸ்துவை பின்பற்றுபவன்தான் கிறிஸ்தவன் என்றால் நான் கிறிஸ்தவனே இல்லை. கிறிஸ்தவனாக வாழ சற்றும் தகுதியில்லாத நான் சமுதாயத்திற்காக உதட்டளவில் மட்டும் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகின்றேன்.
(இது என்னைப்பற்றிய சுய பரிசோதனை மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு அல்ல. மீண்டும் ஒருமுறை உங்களை மன்னிக்கக்கேட்டுக் கொள்கின்றேன் - தவறுகள் இருப்பின்)
நன்றி .
இக்னேஷியஸ் பிரவீன் சுதாகர்.